Tuesday, August 15, 2006

சிதம்பரத் தீர்ப்பும் குட்டிக் கதையும்

சிதம்பரம் கோயிலில் திருச்சிற்றம்பலத்தில் ஆறுமுகச்சாமி "தமிழில்" சைவ திருப்பாடல்கள் பாடுவதற்கு எதிராக தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து நண்பர் ஒருவரின் பதிவு அளித்த ஊக்கத்தின் விளைவே இக்குட்டிக்கதைப் பதிவு !

ஒரு மாணவன் தேர்வுக்கு வேண்டி, பசுமாடு பற்றி விளக்கமாக இவ்வாறாகப் படித்தான்,

1. பசுவிற்காக மற்றொரு தமிழ்ச்சொல் 'ஆ'

2. பசு புல், வைக்கோல் போன்றவற்றை உண்டு மனிதர்களுக்கு இன்றியமையாத உணவாகிய பாலைத் தருகிறது.

3. பசு நான்கு கால்களும், இரண்டு கொம்புகளும் உடையது, சாதுவான பிராணியும் கூட !

4. பசுவின் பாலிலிருந்து உருவாகும் நெய், தயிர் போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் தருபவையாகவும் உள்ளன.

5. பசுவை இந்துக்கள் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

6. அதனால், பொதுவாக, இந்துக்கள் பசு மாட்டிறைச்சியை உண்பதில்லை

7. புதுமனை புகுவிழாவிற்கு பசு கூட்டி வரப்பட்டு அதற்கு பூசை செய்யப்படுகிறது.

இப்படியாக, பசுவைப் பற்றிய (பலர் அறிந்த, அறியாத!) பலப்பல விஷயங்களை நெட்டுரு போட்டு விட்டு, தேர்வுக்குச் சென்ற அம்மாணவனுக்கு பெரிய அதிர்ச்சி ! கேள்வித் தாளில் தென்னை பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது ! சற்றே யோசித்த அந்த 'புத்திசாலி' மாணவன், கிடுகிடுவென்று பசுவைப் பற்றி தான் படித்து வைத்திருந்ததை ஒன்று விடாமல் எழுதி விட்டு, முத்தாய்ப்பாக, "அத்தகைய சிறப்புகளை பெற்ற பசுவானது, அழகான தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது!" என்று கட்டுரையை நிறைவு செய்தான் !

ஆக, பசுவைப் பற்றி தனக்குத் தெரிந்ததை எழுதிய மாதிரியும் ஆயிற்று, தென்னையைப் பற்றிய கட்டுரை எழுதிய திருப்தியும் ஏற்பட்டது அம்மாணவனுக்கு !!! மாணவனின் சமயோஜிதத்தையும், கெட்டிக்காரத்தனத்தையும் வியந்து பாராட்டி, ஆசிரியர் அக்கட்டுரைக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கினார் ! இன்ன பிறரும் அவனைப் பாராட்டினார்கள் !

பி.கு: குட்டிக்கதையை எழுதி முடித்து விட்டு ஏதோ ஒன்று எழுத நினைத்தது மறந்து விட்டதே என்று நினைத்தேன் ! யோசித்தேன், அது இது தான் .... அம்மாணவனின் பெயர் 'அம்பேத்கார்' !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

15 மறுமொழிகள்:

said...

ஏதாவது "உள்குத்து" இருக்கா இதிலே ? குட்டிக்கதை பரவாயில்லை :)

said...

ஊக்கம் தந்த நண்பர் யாருன்னு சொல்லுங்க

Muse (# 01429798200730556938) said...

பாலா,

அம்பேத்கார்மேல் எனக்கு மரியாதை உண்டு. தங்களின் கதை அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பெயரை தாங்கள் இப்படி உபயோகித்திருப்பதற்கு ஏதேனும் நியாயமான காரணங்கள் உண்டா?

ஒரு வேளை அருண் ஷௌரியுடைய Worshipping False God புத்தகத்தைப் படித்ததன் பாதிப்பா?

said...

http://kuzhali.blogspot.com/2006/08/blog-post.html

enRenRum-anbudan.BALA said...

Muse,
//அம்பேத்கார்மேல் எனக்கு மரியாதை உண்டு. தங்களின் கதை அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பெயரை தாங்கள் இப்படி உபயோகித்திருப்பதற்கு ஏதேனும் நியாயமான காரணங்கள் உண்டா?
//
முதலில், இப்பதிவு எதன் கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பது என்று பாருங்கள் :)
குழலி பதிவையட்டி அங்கதமாக எழுதப்பட்டது ! குழலி பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்தீர்களா ?

மேலும், அம்பேத்காரைப் பற்றி மரியாதைக் குறைவாக இதில் ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயமாகக் கிடையாது ! தாங்கள் மனம் வருந்தியிருந்தால், மன்னியுங்கள்.

அம்பேத்கார் மேல் எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு, நண்பரே !

Muse (# 01429798200730556938) said...

பாலா,

மன்னிப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை. தயவு செய்து உபயோகிக்க வேண்டாம்.

புரியாமல் படித்ததில் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதானால்தான் கேட்டிருந்தேன்.

அதே சமயத்தில் யாரையும் மிக நல்லவராகவோ, மிகக் கெட்டவராகவோ பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை, அது அம்பேத்காராகவிருப்பினும். நியாயமான காரணங்கள் இருப்பதால் தாங்கள் அங்கனம் எழுதியிருப்பீர்கள் என்ற எண்னத்தில் கேட்டென். இப்போது தங்களது பின்னூட்டம் படித்தவுடன் புரிகிறது. நன்றிகள்.

சிலருக்குத் தங்களது கற்பனை வரலாற்றை நிஜமாக்கும் வெறியுள்ளது. அந்த குறிப்பிட்ட வெறியினால் மக்களை மேன்மேலும் பிரித்து அழித்துக்கொள்வதில், ரத்தம் குடிப்பதில் காலம் உழைப்பு செலவாகிறது. இந்தியாவை ஆப்பிரிக்க நாடுகள் போலாக்கிவிடும் இவர்கள் இந்தியாவின் துரதிர்ஷ்டம்.

said...

அப்படி போடு அறுவாளை.....

அண்ணா...உள்குத்துலையே சூப்பர் குத்தா குத்துரீங்களே....சமீபத்தில குழலி அப்படீன்னு ஒருத்தர் ஒரு பதிவு போட்டாரு...அதுல கட கடன்னு இப்படி இடைக்கால தீர்ப்பு வந்ததுக்கு/வர்ரதுக்கு/வரப்போரதுக்கு அல்லாத்துக்கும் காரணம் நீதி மன்றத்துல ஒரே பாப்பாரக் கூட்டமா இருக்குது அப்படீன்னு எழுதி கடாசுனாரு....அதுக்கு ஒடனே ஒரு மூணு பேரு ஆமா ஆமா பெரியண்ணே அப்படீன்னு பின்னூட்டமெல்லாம் போட்டாங்க..அப்புறம் ஒருத்தரு அண்ணே...தீர்ப்பு வாசிச்சவரு பேரு அம்பேத்கார்...அப்படீன்னுட்டு லேசா இழுத்தாரு...அப்பதாம் அண்னே சுதாரிச்சிக்கினு ...என்னவோ எழுத வுட்டுட்டேனே அப்படீன்னு நெனைச்சேன்..இத..இதத்தான்...அப்படின்னுட்டு அதை ஐரனி (ஐயரணி இல்லீங்கோ..இங்கிலிபீசு ஐரனி) அப்படீன்னாரு..
அது சரி...சிதம்பரத்துல யாரு ஓதுனாலும் ஓதாடியும்...அல்லாத்துக்கும் காரணம் ஐயருங்கதான்னு இவிங்க ஓதுரது மட்டும் நிக்காது.....இதே தீர்ப்பு மாத்தி சொல்லியிருந்தா அப்ப தர்மத்துக்கு கிடைத்த வெற்றி..அரவாணன் அபிமன்யுவுக்கு கொடுத்த ரெண்டாவது அடி அப்படீன்னுட்டு எழுதியிருப்பாங்க...அதுக்கும் திரைக்கதை..வசனமெல்லாம் ரெடியா எழுதி வச்சு இருப்பாங்க... பின்னூட்டத்தையும் சேர்த்து...ஆனா தீர்ப்பு மாறிப்போச்சே..அதுலையும் கொடுத்த நீதிபதி பாப்பானா தெரியாது...அதான் ஐரனி...நீதிமன்றம் நிரப்பும் போராட்டம் தேவை அப்படி இப்படீன்னுட்டு டகால்பாஜி காட்டுராங்க..இதுக்கு ஒருத்தரு 1957-ல் ஈ.வெ.ரா -வின் கட்டுரையை எடுத்து போட்டாரு...அது ஒரு அபத்தம்...சாமிய நம்புரவன் அதக் கும்புடுற மாதிரி..ஈ.வெ.ரா பின்னாடி போரவன் இந்த கட்டுரைய தொட்டு கும்பிட்டுட்டு போய்க்கே இருக்க வேண்டியது...அதுவும் மனு தர்மத்த பத்தி சொன்னது..ஏ..க்ளாஸ்...
அதுனால பையன் பசுமாட்டு கட்டுரைய எழுதுன மாதிரி எத்த வேணா எழுதிப் போடுங்க... தலைப்புக்கு ஏத்தமாதிரி கடசீ வரியை எழுதிட்டா போதும்.....இன்னும் எல்லாத்துலையும் இறுதி தீர்ப்பெல்லாம் வர வேண்டியிருக்கு...அதுக்குள்ள இன்னும் ஒரு நாலஞ்சு பதிவு ரெடி பண்ணி வச்சுகோங்க...போட்டு தாக்கிரலாம்...

அல்லாம் டைம் பாஸ் மச்சீ..

அது சரி...இதுக்கு நடுவுல இந்த ம்யூசிங் வந்து அனாவசியமா மிஸ்ஸிங் ஆயிட்டாரே...அண்ணா ம்யூசண்ணா..இங்க அம்பேத்கார எங்கண்ணா இஸ்த்து இருக்காரு...அதிர்சியாரதுக்கு?????

சரவணகுமார்

said...

I read the bala' friends post.The follow up thread conversation made me to remember this joke.(might be you should take a peek at the other thread)
Once a sardar went to a VGP shop and asked how much this TV costs.Sales man politely replied we won't sell that to you.He was so upset and thought it is because he is a sardar , he couldn't get the TV.
Next day he changed his costume , went back to the shop.He asked how much this TV costs, sales man again politely replied we won't sell that to you.
He thought , they identified him in this costume.So he tried agin with different tactics( ofcourse no bus burning and tree cutting).No luck.
Finally he approached the sales guy and said its okay if you don't sell that TV but I want to know how you found out that I am sardar.

Sales man politely replied I don't know who you are , all that I know is what you are asking is not a TV , it is a microwave.

Guys no offense.Just take it easy

-------Narayanan

enRenRum-anbudan.BALA said...

சரவணகுமார்,
விரிவான கருத்துக்களுக்கு நன்றி !

//
//
//
//
நகைச்சுவையை ரசித்தேன் :))))))))

muse,
புரிந்து கொண்டமைக்கு நன்றி.

CT,
Thanks for your comments ! நீங்கள் அப்பாவியா ??????

Narayanan,
Thanks ! Sardar story is good :)

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

சரவணகுமார்,
விரிவான கருத்துக்களுக்கு நன்றி !

//அப்பதாம் அண்னே சுதாரிச்சிக்கினு ...என்னவோ எழுத வுட்டுட்டேனே அப்படீன்னு நெனைச்சேன்..இத..இதத்தான்...அப்படின்னுட்டு அதை ஐரனி (ஐயரணி இல்லீங்கோ..இங்கிலிபீசு ஐரனி) அப்படீன்னாரு..

//
//அதுனால பையன் பசுமாட்டு கட்டுரைய எழுதுன மாதிரி எத்த வேணா எழுதிப் போடுங்க... தலைப்புக்கு ஏத்தமாதிரி கடசீ வரியை எழுதிட்டா போதும்.....இன்னும் எல்லாத்துலையும் இறுதி தீர்ப்பெல்லாம் வர வேண்டியிருக்கு...அதுக்குள்ள இன்னும் ஒரு நாலஞ்சு பதிவு ரெடி பண்ணி வச்சுகோங்க...போட்டு தாக்கிரலாம்...
//
நகைச்சுவையை ரசித்தேன் :))))))))

muse,
புரிந்து கொண்டமைக்கு நன்றி.

CT,
Thanks for your comments ! நீங்கள் அப்பாவியா ??????

Narayanan,
Thanks ! Sardar story is good :)

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

:)))))))))))))

சிறில் அலெக்ஸ் said...

ஏங்க பதிவு போடனும்னு முடிவு பண்ணியாச்சுன்ன சும்மா வெளிப்படையாவே போடலாமே.

எனக்கு என்ன விஷயம்னு தெரிஞ்சுக்க ஆசை ஆனா மர மண்டைக்கு ஒண்ணுமே புரியல ..

:)

Amar said...

கத நல்லாயிருக்கு பாலா.

enRenRum-anbudan.BALA said...

அலெக்ஸ்,

நன்றி ! நீங்களா 'மரமண்டை' ? ஒவ்வொரு பதிவிலயும் என்ன கூர்மையா பின்னூட்டம் போடறீங்க :)

சமுத்ரா,

நன்றி !

நம்ம கதை எப்போதும் நல்லாவே இருக்கும் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

good one :))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails